முத்து மாரியம்மன் கோயில் திருவிழா!

கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் கிராமத்தில் 56-ம் ஆண்டு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.;

Update: 2025-08-23 15:56 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் கிராமத்தில் 56-ம் ஆண்டு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலகு குத்திய பக்தர்களுடன் கரக ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளுடன் பூப்பல்லக்கு, அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News