"அடக்கி வாசிங்க ப்ரோ". திமுகவினரின் போஸ்டர்கள்

மதுரையில் திமுகவினரின் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது;

Update: 2025-08-24 07:01 GMT
மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தவெக மாநாட்டில் விஜய் பேசும் போது முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று கூறி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியினர் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ என்ற வாசகங்கள் அடங்கிய பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு விஜய் ரசிகர்கள் ரியாக்ஷனை மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News