கல்குளம் வட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் மருத்துவ பரிசோதனை முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்- இம்முகாமில் 610 ஆண்களும், 2013 பெண்களும், 227 குழந்தைகள் என மொத்தம் 2,850 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என கூறினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டிபன் ராஜ், உட்பட துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.