கொத்தகுப்பத்தில் குடிநீர் வழங்கும் திட்டம்!
5 இலட்சம் மதிப்பீட்டில் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட 5 ரூபாய் குடிநீர் வழங்கும் திட்டம் (RO) பிளான்ட் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கொத்தகுப்பத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட 5 ரூபாய் குடிநீர் வழங்கும் திட்டம் (RO) பிளான்ட் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளருமான N.E.சத்யானந்தம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி நித்தியானந்தம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.