இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம்!
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான விழா குழுவினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.;
வேலூர் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான விழா குழுவினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணியில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.