லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தைகள், தம்பதியர் படுகாயம்!
தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதி விபத்து: 2 குழந்தைகள், தம்பதியர் படுகாயம்!;
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமார் (38), இவரது தனது மனைவி கோமதி (29), மகன்கள் ஆத்விக் (7), நிதர்சன் (6) ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - மதுரை பைபாஸ் வழியாக ஸ்டெர்லைட் பாலத்தையடுத்த ஜோதி நகர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் இருந்த 4பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 4பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.