கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா!
கிருபானந்த வாரியார் மணிமண்டபத்தில் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் மணிமண்டபத்தில் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் மற்றும் காங்கேயநல்லூர் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.