ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை தற்கொலை முயற்சி!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சகிமா என்ற திருநங்கை தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சகிமா என்ற திருநங்கை தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி; பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்; மேலும் போலீசார் முதல் கட்ட விசாரணையில் தான் வசூல் செய்து வரும் பணத்தை சில திருநங்கைகள் பிடுங்குவதாகவும் மேலும் தன்னை ஜாதி ரீதியாக அணுகுவதாக கூறிபலமுறை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சி செய்து கொள்வதாக தெரிவித்தார் தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகிமா இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் இவர் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வசூல் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகிமா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடை வாசல் பகுதியில் நின்று கொண்டு மதுபான கடைக்கு வரும் நபர்களிடம் வசூல் ஈடுபட்டு வந்துள்ளார் அப்போது அங்கே வந்த ரீமா, சிவன்யா, கற்பகம், பாண்டி செல்வி ,சத்யா ,உதயா, சைலு உள்ளிட்ட திருநங்கைகள் இந்த இடம் தாங்கள் வசூல் செய்யும் இடம் இந்த இடத்திற்கு நீ எப்படி வந்து வசூல் செய்யலாம் என திருநங்கை சகிமாவை தாக்கியதுடன் அவரிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு உள்ளனர் மேலும் ஜாதி ரீதியாகவும் திட்டி இனிமேல் தங்கள் வசூல் செய்யும் பகுதியில் வசூல் செய்ய கூடாது என கூறியுள்ளனர் இது தொடர்பாக சகிமா வடபாகம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளார் ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர் அப்போது காவல் நிலையத்தில் வைத்து மீண்டும் திருநங்கைகள் சகிமாவை மற்றும் அவரது சகோதரியை தாக்கியுள்ளனர் இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சகிமா இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தன்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தனக்கு பாதுகாப்பு அளிக்காத காவல்துறையை கண்டித்து தான் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ குளிக்க முயன்றார் இதைத்தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரது கையில் இருந்த பெட்ரோலை வாங்கி கொண்டு சென்றனர் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து திருநங்கை சகிமாவிடம் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என விசாரணை விசாரணை நடத்தினர்