கரூர்- விசிக நிர்வாகிகள் மீது பொய் புகார் கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கரூர்- விசிக நிர்வாகிகள் மீது பொய் புகார் கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-08-25 08:56 GMT
கரூர்- விசிக நிர்வாகிகள் மீது பொய் புகார் கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல்,மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி,கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துரை செந்தில் மற்றும் மாவட்ட பொருளாளர் சதீஷ் ஆகியோர் மீது தொடர்ந்து பொய் பிரச்சாரங்களையும், அவதூறு செய்திகளையும் வெளியிட்டு வரும் பறையர் பேரவை ரவிச்சந்திரனை கைது செய்ய வலியுறுத்தியும் , உப்பிடமங்கலம் உதயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பொய் புகார்களை கட்டவிழ்த்து விடும் ரவிச்சந்திரன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News