கரூர்-பணியின் போது உயிரிழந்த தலித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு - ஆட்சியரிடம் புகார்.
கரூர்-பணியின் போது உயிரிழந்த தலித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு - ஆட்சியரிடம் புகார்.;
கரூர்-பணியின் போது உயிரிழந்த தலித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு - ஆட்சியரிடம் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா,ஆண்டிபட்டி காலனியில் வசித்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் வயது 37 என்பவர் கடந்த 10-6-24 அன்று வாங்கிலியப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வேலை செய்யும் போதுகயிறு அறுந்து விழுந்ததில் ராஜ்குமார் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கும் போதுபாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் இதுவரை எவ்வித முறையான விசாரணை நடத்தவில்லை எனவும், உரிய இழப்பீடு வழங்கவில்லை எனவும் புகார் தெரிவித்தவர் , இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.ஏற்கனவே இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், மேலும் காலதாமதம் செய்தால் தலித் விடுதலை இயக்கம் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.