ஏமூர் அடுத்தடுத்து சரக்கு வாகனங்கள் மோதி டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.
ஏமூர் அடுத்தடுத்து சரக்கு வாகனங்கள் மோதி டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.;
ஏமூர் அடுத்தடுத்து சரக்கு வாகனங்கள் மோதி டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் ஜெகதாபியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில் அவரது டூவீலரில் ஏமூர் அருகே சென்றபோது, இவருக்குப் பின்னால் திருப்பூரைச் சேர்ந்த பிரவீன்குமார்,கரூர் லிங்கத்தூரை சேர்ந்த ஆறுமுகம் இருவரும் தனித்தனியாக சரக்கு வாகனங்களை அதேசாலையில் பின்னால் ஓட்டி வந்த போது, பிரவீன் குமார் சரக்கு வாகனம் ஆறுமுகம் சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது. அப்போது ஆறுமுகத்தின் வாகனம் ரத்தினகுமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரத்தினகுமாரை கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் குறித்து ரத்தினகுமார் அளித்த புகாரில் பிரவீன் குமார் ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.