தாந்தோணி மலை - மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை- ஒருவர் கைது.

தாந்தோணி மலை - மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை- ஒருவர் கைது.;

Update: 2025-08-25 11:00 GMT
தாந்தோணி மலை - மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை- ஒருவர் கைது. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகத்துக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த 30 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்தனர் தாந்தோணி மலை காவல்துறையினர்

Similar News