கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலய வருஷாபிஷேக விழா
கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலய வருஷாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது அதைத் தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடைபெற்றது காலை 4.35 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் புன்னியாக வாசனம் கும்ப பூஜை கணபதி ஹோமம் அம்பாள் மூலமந்திர ஹோமம் புர்ணாஷுதி தீபாராதனை நடைபெற்றது காலை 6.45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது அதைத் தொடர்ந்து மூலவர் அம்பாள் பூமாதேவி உற்சவர் அம்பாள் குரு நாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார செய்யப்பட்டு சோடச தீபாராதனை நடைபெற்றது இவ்விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது