கரூர் -குடியிருக்கும் நிலத்தின் வரியை பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.

கரூர் -குடியிருக்கும் நிலத்தின் வரியை பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.;

Update: 2025-08-25 11:50 GMT
கரூர் -குடியிருக்கும் நிலத்தின் வரியை பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். கடந்த 1977-ல் கரூர் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருகில் உள்ள ராயனூர் தில்லை நகர் பகுதியில் அருள்மிகு கல்யாண வெங்கட ரமண கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருக்க130 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கி தந்தனர். ஒரு வீட்டிற்கு நிலத்தின் வாடகையாக 50 ரூபாய் பெற்றுக் கொண்டனர். தற்போது திடீரென ஒவ்வொரு வீட்டின் நிலத்திற்கு ரூபாய் 18,500 முதல் 50,000 வரை உயர்த்தியதால் அங்கு குடியிருக்கும் ஏழை எளிய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் மக்கள் செய்வதறியாது தவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாரியாயி கூறும் போது அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் எங்களால் அறிவிக்கப்பட்ட இந்த வாடகையை செலுத்த இயலாது. எனவே உயர்த்திய வாடகையை திரும்ப பெற வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தார்.

Similar News