கோவை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

சீமாறு புல் சேகரித்தவர் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி.;

Update: 2025-08-25 13:48 GMT
கோவை மாவட்டம் ஆனைகட்டி, பெருமாள் முடி வனப்பகுதியில் நேற்று பரபரப்பான சம்பவம் நடந்தது. ஆட்டுக்கல் மலை கிராமத்தைச் சேர்ந்த நால்வர் சீமாறு புல் எடுக்க வனப்பகுதிக்குள் சென்றிருந்தனர். அப்போது திடீரென ஒரு ஒற்றைக் காட்டு யானை தோன்றி, அவர்களை துரத்தியது. அதில் தப்பிக்க முயன்ற மருதாச்சலம் என்பவர் மீது யானை தாக்கியது. கடும் காயமடைந்த அவர் அங்கேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News