மன்னார்குடி ஜீயர் மீது திராவிடர் கழகத்தினர் காவல் நிலையத்தில் புகார்

சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-08-25 14:29 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 18ஆம் தேதி மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் இந்து தர்மத்தையும் இந்து கலாச்சாரத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசுபவர்களையும் சமூக வலைதளங்களில் ஹிந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பதிவிடுபவர்களையும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து சகல விதமான ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு அவர்களை சாலையில் நடமாட முடியாத அளவிற்கு எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் திராவிடக் கழகம் சார்பில் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் இன்று மன்னார்குடி ஜீயர் மீது புகார் அளிக்கப்பட்டது திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் திராவிடர் கழக நிர்வாகிகள் மன்னார்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ஆர்வனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் இம்மாதம் 18ஆம் தேதி மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் ஆக பொறுப்பு வகிக்கும் ஸ்ரீ சென்டலங்கார செண்பக மன்னர் ஜீயர் சுவாமிகள் ஹிந்து தர்மத்தையும் இந்து கலாச்சாரத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசுபவர்களையும் சமூக வலைதளங்களில் ஹிந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பதிவிடுபவர்களையும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து சகலவித ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு அவர்களை சாலையில் நடமாட முடியாத அளவிற்கு எதிர்கொள்ள வேண்டும் என கொலை வெறியை தூண்டும் விதத்தில் அளவுக்கு அதிகமாக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருப்பதாகவும் மன்னார்குடி ஜியரின் இத்தகைய கருத்துக்கள் கொலை வெறியை தூண்டும் விதத்திலும் சமூகநீதி சமய சார்பின்மை சமூக ஒற்றுமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடும் சமூக நீதி சார்ந்த இயக்கத்தவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வகையில் மன்னார்குடி ஜீயர் பேட்டியளித்துள்ளார் எனவே சமூகத்தில் ஆயுத வன்முறை கலாச்சாரத்தை தூண்டும் விதத்தில் பேசிய மன்னார்குடி ஜீயர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சமூக ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News