தேமுதிக சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்..
தேமுதிக சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்..;
நாமக்கல் வடக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 73.வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா மற்றும் 500 நபர்களுக்கு அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முரசு முருகானந்தம், மற்றும் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ரா.ரமேஷ் குமார், மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் வடிவேல், ஊராட்சி பிரதிநிதி கண்ணன், ஊராட்சி செயலாளர் குமரேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..