முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, சார்பில் இரத்ததான சிறப்பு முகாம்..
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, சார்பில் இரத்ததான சிறப்பு முகாம்..;
இராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் மூலமாக இரத்ததான சிறப்பு முகாம் 25-08-2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில், இரத்ததானம் சிறப்புகள் பற்றி மருந்துவ அலுவலர் டாக்டர் எ. அன்புமலர் எம்.பி.பி.ஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நாமக்கல் அவர்கள் எடுத்து கூறினார்கள். இரத்ததானம் முகாமில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உத்தமப் பணியான இரத்ததான பணியில் ஈடுபட்டனர். இரத்ததானம் செய்த அணைவரையும் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளார் ஆர்.பிரேம்குமார் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.விஜயகுமார் ஆகியோர் பாராட்டினார்கள். மற்றும் முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் பி.இராகவேந்திரன் மற்றும் நாட்டு நலப்பணத் திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் அலுவலர்கள் கே.அருண்பிரசாத், எஸ்.சுரேஷ்குமார் மற்றும் விசி.பிரபா ஆகியோர் செய்திருந்தினார்.. மேலும் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.