கோவை பாரதியார் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் கோரிக்கை !
பாரதியார் பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தரம் கோரி கோரிக்கை.;
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கி, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், 227 தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, ஊதிய நிர்ணயம், பதவி உயர்வு, நிலுவைத் தொகை ஆகியவற்றை மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என்றும், தாமதமானால் 6% வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக பணியாளர் சங்கம் கோரியுள்ளது.