வெள்ளிங்கிரி கோவில் அலுவலகத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அலுவலகத்தில் காட்டு யானை ஆதிக்கம்.;
தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக இந்த யானை கோவில் வளாகத்துக்குள் வந்து கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணி வருகின்றது. நேற்று அது கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டது. இதனால் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் அச்சத்தில் “இறங்கி வா சாமி, அங்க ஒன்னும் இல்ல... போ... போ...” என சத்தம் போட்டனர். பின்னர் யானை கீழே இறங்கி சென்றது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.