காலை உணவு திட்டம் – நாளை தொடக்கம் !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.;

Update: 2025-08-25 16:53 GMT
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற உள்ளனர். கோவை மாவட்டத்தில் 58 பள்ளிகள், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகள் என மொத்தம் 86 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கோவையில் 9,793 மாணவர்களும், பொள்ளாச்சியில் 1,139 மாணவர்களும், மொத்தம் 10,932 மாணவர்கள் பயனடைகின்றனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News