கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிவேகமாக சென்று பணியாற்றும் வகையில் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்' வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை நேற்று(ஆக.25) முதல் இயக்கப்படுகிறது. இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அங்கு செல்வதற்கு வசதியாக இந்த வாகனம் ஈடுபடுத்தப்படவுள்ளது.