ஆர்ச் மீது ஏறி ஆட்டோ டிரைவர் போர
மதுரை வாடிப்பட்டியில் ஆர்ச் மீது ஏறி ஆட்டோ டிரைவர் போராட்டம் நடத்தினார்;
மதுரை அருகே குலசேகரன்கோட்டையை சேர்ந்த அம்பேத் ராஜா( 35) என்ற ஆட்டோ டிரைவரின் மைத்துனர் யுவராஜ்( 25) என்பவரை சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் கைதானார்.இதற்கு அடைக்கலம் தந்த அம்பேத்ராஜா, மனைவியும் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த அம்பேத்ராஜா, போலீசார் பொய் வழக்கில் கைது செய்ததாக கூறி நேற்று (ஆக.25) மதியம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் ஆர்ச் மீது ஏறி பெட்ரோல் பாட்டில் உடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை வேடிக்கை பார்த்த மக்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.