பூக்களின் விலை கடுமையாக உயர்வு

மதுரையில் பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2025-08-26 05:05 GMT
மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை நான்கு மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மதுரை மல்லிகை பூ கிலோ 2800 ரூபாயும், முல்லைப் பூ 1200 ரூபாய்க்கும், செவ்வந்தி, பிச்சி - 1200, கனகாம்பரம் - 1000, அரளி - 700, பட்டன் ரோஸ் - 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மதியம் மற்றும் மாலை வேளைகளில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News