சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சாலை ஓர தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்தையே பரிதாபமாக உயிரிழந்தார்.;
பாமணி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரவீன். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பாமணி நோக்கி இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் மன்னை நகர் அருகே பாமணி சாலையில் சென்ற போது சாலை ஓரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவீனை அவ்வழியாக சென்றோர் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிரிவீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரவீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.