கீழப்பட்டு கிராமத்தில் பாலம் கட்டும் பணி தொடங்க கோரிக்கை

மன்னார்குடி அருகே கீழப்பட்டு கிராமத்தில் மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.;

Update: 2025-08-26 06:02 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் தெற்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.தெற்கு தெரு வழியாக எட கீழையூர், அன்னவாசல் உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் சாலையின் நடுவே இலுப்பப்பட்டி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் நடுவே பாலம் கட்டுவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.ஆனால் தற்போது வரை பாலம் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் அவ்வபோது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் ஆட்டோ,வேன் மூலம் நாள்தோறும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் இந்த பாலம் கட்டப்படாததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது தற்போது இந்த வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்வதால் சாலையின் ஓரங்களில் மண் கரைந்து சாலை இடிந்து விடுமோ என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் மேலும் வாய்க்காலின் நடுவே சிமெண்ட் குழாய்களை வைத்து தற்காலிக பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

Similar News