காக்கம்பட்டியில் வயலில் உழவு ஓட்டும் போது டிராக்டர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.

காக்கம்பட்டியில் வயலில் உழவு ஓட்டும் போது டிராக்டர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.;

Update: 2025-08-26 11:06 GMT
காக்கம்பட்டியில் வயலில் உழவு ஓட்டும் போது டிராக்டர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி மனைவி சாந்தி வயது 47. இவரது தோட்டத்தில் உழவு ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வயது 54 என்பவர் வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் டிராக்டரில் உழவு ஓட்டிக் கொண்டு இருந்தார். அப்போது டிராக்டரை ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னால் நின்று கொண்டிருந்த பாலுசாமியை கவனிக்காமல் மோதி விட்டார். இதில் பாலுசாமிக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவரை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சாந்தி அளித்த புகாரில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட மாயனூர் காவல்துறையினர் விபத்து ஏற்படும் வகையில் டிராக்டரை இயக்கிய சக்திவேல் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News