கோவையில் சூரிய மின் சக்தி விழிப்புணர்வு முகாம் !
கோவை சூலூர் அருகே காடுவெட்டிபாளையம், சோமனூர் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே காடுவெட்டிபாளையம், சோமனூர் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், மேற்கூரைகளில் சூரிய அலகுகள் அமைப்பவர்களுக்கு மத்திய அரசின் மானியம் கிடைக்கும். 3 கிலோவாட் வரை ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படும். சொந்த வீடு மற்றும் மின்சார இணைப்பு கொண்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்கலாம். குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.