காலை உணவு திட்டத்தினை காணொளி மூலம் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்துஆர் சி பாத்திமா பள்ளியில் உணவை வழங்கி மாணவர்களுடன் உணவருந்திய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

தனியார் பள்ளிக்கு காலை உணவு திட்டத்தினை காணொளி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்ததை ஆர் சி பாத்திமா பள்ளியில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ காலை உணவை வழங்கி மாணவிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.;

Update: 2025-08-26 12:19 GMT
அரியலூர், ஆக.26- சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில்,காணொளி காட்சி வாயிலாகத் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் பள்ளியில் பயிலும் 1330 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி, மாணவச் செல்வங்களுடன் காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அசோக்குமார்,நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, ,பள்ளி ஆய்வாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர் நடராஜன்,பள்ளி தாளாளர் அருட்சகோதரி பவுலின் மேரி, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஸ்டெல்லா மேரி, நகர்மன்ற உறுப்பினர்கள் துர்கா ஆனந்த், கிருபாநிதி மற்றும் இருபால் ஆசிரியர்கள்,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர். கலந்துகொண்டனர்.

Similar News