தாய் கண்டிப்பு. மகன் தற்கொலை

மதுரை உசிலம்பட்டி அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-08-26 12:52 GMT
மதுரை மாவட்டம் கருமாத்தூர் பூசாரி பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் பிரபாகரன்(21) என்பவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் விரக்தி அடைந்த பிரபாகரன் நேற்று முன்தினம் (ஆக.24) நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி பிரியதர்ஷினி நேற்று (ஆக.25) காலை உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News