விநாயகர் சதுர்த்தி: கோவையில் பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
கோவை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.;
கோவை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செவ்வந்திப் பூ கிலோ ரூ.400, அரளிப் பூ ரூ.300–350, எருக்கம்பூ மாலை, அருகம்புல் கொத்து ரூ.20–40க்கு விற்பனையாகின. மேலும் அரை அடி முதல் 3 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள், அலங்கார பொருட்கள், தங்க நிற குடைகள், தோரணங்கள் என பலவகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் போக்குவரத்தை சரிசெய்து வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.