கோவை: அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொட்டியில் புறா சடலம்
கோவை அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொட்டியில் புறா சடலம் : நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது குடியிருப்போர் குற்றச்சாட்டு;
கோவை, கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள B2 பிளாக்கின் குடிநீர் தொட்டியில் புறா ஒன்று விழுந்து இறந்தது. இதை குறித்து குடியிருப்போர் தகவல் அளித்தும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 1,848 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் குடிநீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் தனியார் விற்பனையாளர்களிடமிருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.