கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்..
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்..;
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதன் ஒருபகுதியாக திருச்செங்கோடு நகர கழக சார்பில் அண்ணா சிலை அருகில் நகர கழக செயலாளர் குணசேகரன் தலைமையில், கேப்டன் அவர்கள் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் . தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய்சரவணன், அவர்கள் 2500.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். இதில் மாவட்ட கழக பொருளாளர் மகாலிங்கம்,மாவட்ட கழக துணைச் செயலாளர் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் கோபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அலமேலு, நெசவாளர் மாவட்ட அணி துணை செயலாளர் முனியப்பன், இளமுருகன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஞான பிரதீப், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சதீஷ், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், திருச்செங்கோடு நகர நிர்வாகிகள் அவைத் தலைவர் சுரேஷ், பொருளாளர் ரத்தினம், துணைச் செயலாளர்கள் கார்த்தி, பெரியசாமி, ராஜா, மாவட்ட பிரதிநிதி குமாரசாமி, பழனிச்சாமி, சேகர், சிவகுமார், ரூபன், மின்னல்குமார், பரதன்சுரேஷ், பானுரேகா, ஜீவானந்தம், மோகன், மூர்த்தி, சக்திவேல், மகேஷ், திருச்செங்கோடு, லோகேஸ்வரன், கோபி, ராஜவேல், செல்வராஜ், பேச்சாளர் துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.