ராசிபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் பொதுமக்கள் மனுக்கள் மீது காலதாமதம்: நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு..

ராசிபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் பொதுமக்கள் மனுக்கள் மீது காலதாமதம்: நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு..;

Update: 2025-08-26 15:55 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி வருவாய் பிரிவில், பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு பதலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் என ராசிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். ராசிபுரம் நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகர மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதாசங்கர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கோபிநாத் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, சாரதி, நடராஜன், திருமதி ஜெய் புன்னிஷா, சசிரேகா, ஜெயம்மாள் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வலியுறுத்திப் பேசினார். மேலும் நகராட்சி வருவாய் பிரிவில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். இதே போல், முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுத்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வருவாய் ஆய்வாளர் காலதாமதம் செய்து வருகிறார். எனவே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் பிரிவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதே போல் தூய்மை பணிாளர்கள் வார்டுகளுக்கு பேதிய அளவில் வருவதில்லை. இதனால் பலநாட்கள் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சாக்கடை சீர் செய்ய வேண்டும், மேலும் நான்காவது வார்டு பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை நீர் வீடுகளுக்குள் செல்லாமல் தடுக்க தடுப்பு அமைத்து தர வலியுறுத்தியும் இதுவரை செய்யப்படவில்லை எனவும் பழனிசாமி குற்றம் சாற்றினார். மேலும் சில இடங்களுக்கு ஆழ்துளை கிணறு ஏற்படுத்தித் தர வலியுறுத்தினர். மேலும் தெரு நாய்கள் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் சாலைகளில் நடப்பதற்கு அஞ்சும் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். நகர்மன்ற கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நகராட்சி வரி வசூல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தினசரி காய்கறி சந்தை உள்ளிட்டவற்றில் ஏலம் விடுவதில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டு வரும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதியற்ற சிலரின் செயல்களால் நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என கூட்டத்தில் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் அமல்படுத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிதாக நகராட்சியில் பல்வேறு பணிகளில் பணி நியமனம் பெற்ற அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Similar News