கோவை காரமடை மேம்பாலம் அருகே காரில் திடீர் தீ – உயிர் தப்பிய பர்னிச்சர் கடை உரிமையாளர் !
பயணத்தின் நடுவே காரில் தீப்பற்றி பரபரப்பு – உயிர் தப்பிய 63 வயது வியாபாரி;
கோவை காரமடை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் வாசுதேவன் (63) காரில் பயணம் செய்தபோது, காரமடை மேம்பாலம் அருகே திடீரென இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. உடனே வெளியே இறங்கிய அவர் உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். கார் வயரிங் பழுதே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.