கோவை பீளமேடு பகுதியில் சாம்ஸ் ஜிம் புதிய கிளை துவக்கம் !

கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில் சாம்ஸ் ஜிம்மின் இரண்டாவது கிளை துவக்கப்பட்டது. அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த பிரபல டெல்டா ஸ்க்வாட் கமாண்டர் ஈசன் இதை திறந்து வைத்தார்.;

Update: 2025-08-26 16:10 GMT
கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில் சாம்ஸ் ஜிம்மின் இரண்டாவது கிளை துவக்கப்பட்டது. அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த பிரபல டெல்டா ஸ்க்வாட் கமாண்டர் ஈசன் இதை திறந்து வைத்தார். ஜிம்மின் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாம்சன் மெக்கினன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குநர் ஷோபா குத்துவிளக்கேற்றி துவக்கினார். அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆரோக்கியமாக உடலை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் உடல் தகுதி மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் வழிகாட்டுவார்கள் என்றும் சாம்சன் தெரிவித்தார். ஈசன் தனது உரையில், உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம் என்றும், மருத்துவச் செலவை தவிர்க்க ஆரோக்கியத்திற்காக முதலீடு செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Similar News