கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி !

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.;

Update: 2025-08-26 16:30 GMT
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் நடைபெறும் இந்துமத நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் பங்கேற்கிறார் என்பது இந்து உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும், விசிக தலைவர் வன்னியரசு ராமர் குறித்து கூறிய கருத்துகளை கடுமையாக கண்டித்தார். ஆணவக் கொலைகள் நடைபெறுவதற்கு ராமனோ சனாதன தர்மமோ காரணமல்ல; சட்டம் ஒழுங்கு குறைபாடுதான் காரணம் என்றும், தமிழகத்தில் ஆணவக் கொலை தடுக்கும் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராமனை வணங்கும் மக்கள், வன்னியரசுக்கு ஓட்டு அளிக்கக்கூடாது என்றும், பாஜக சார்பில் கம்பராமாயணம் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழையும் தமிழர்களையும் மதிப்பது பாஜகதான்; குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தது அதற்கு சான்று எனவும் கூறினார். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காதது ஏன் என்பதை விளக்க வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

Similar News