நெல்லை அரசு மருத்துவமனையில் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கிட்னி மகனுக்கு பொருத்திய போது அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த பாட்டி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்துள்ளார். அதில் இருவருக்கும் மாற்று கிட்னி வைத்து அரசு மருத்துவமனை உயிரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.