நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர கூட்டம் பாரதிநகரில் நகர தலைவர் ரியல் பீர் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தொடர்ந்து மின்விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.