முன்னாள் நகர்மன்ற தலைவரை சந்தித்த திமுகவினர்
நெல்லை மேற்கு மாநகர திமுகவினர்;
திமுகவின் பேரறிஞர் அண்ணா விருது பெற உள்ள தணிக்கை குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப.சீத்தாராமனை இன்று (ஆகஸ்ட் 27) நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பல்வேறு ஆலோசனை பெற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.