சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது;

Update: 2025-08-27 08:51 GMT
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் கடைவீதி பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு இன்று காலை விவசாயிகள் அதிகளவு பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.700 வரை விற்ற குண்டுமல்லி இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.600 வரை விற்பனையான சன்னமல்லி ரூ.1,600-க்கும், கடந்த வாரம் ரூ.250 வரை விற்கப்பட்ட காக்கட்டான் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கலர் காக்கட்டான் கிலோ ரூ.500-க்கும், அரளி, வெள்ளை அரளி ரூ.240-க்கும், மஞ்சள் அரளி, செவ்வரளி தலா ரூ.300-க்கும், ஐந்தடுக்கு செவ்வரளி ரூ.260-க்கும், நந்தியாவட்டம் ரூ.400-க்கும், சின்னநந்தியாவட்டம் ரூ.600-க்கும், மலை காக்கட்டான் ரூ.600-க்கும், சாமந்தி ரூ.370-க்கும், சாதா சம்பங்கி ரூ.350-க்கும் விற்கப்பட்டன.

Similar News