சேலத்தில் தொழிலாளியை தாக்கியவர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-08-27 09:09 GMT
சேலம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (30) என்பவர் சத்தம் போட்டு கொண்டு இருந்தார். இதையடுத்து சத்தம் போடாமல் இருக்குமாறு கண்ணன் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கதிரவன், கண்ணனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவனை கைது செய்தனர்.

Similar News