தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 53). இவர், நேற்று சேலம் டவுன் ஜெயா தியேட்டர் அருகில் உள்ள ஒரு டீக்கடை பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் மாதேஸ்வரனிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். அதற்கு அவர் பணம் தரமுடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாதேஸ்வரனிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் அண்ணாநகரை சேர்ந்த ரவிக்குமார் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.