நடிகர் விஜய் மீது வழக்கு. கூட கோவிலுக்கு மாற்றம்
தவக்கத் தலைவர் விஜய் மீது பதிவு செய்த வழக்கு கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.;
மதுரையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தவெக மாநாட்டில் சரத்குமார் என்ற இளைஞரை பவுன்சர் தூக்கி போட்ட விவகாரத்தில் விஜய், அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது குன்னம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது திருமங்கலம் அருகே உள்ள கூடக் கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.