திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்து பகுதியில் இன்று (ஆகஸ்ட் 27) முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.