தியாகராஜ சுவாமி கோவில் தெருவில் பொதுமக்கள் சார்பில் ராஜ விநாயகர் வைத்து சிறப்பு பூஜை...
தியாகராஜ சுவாமி கோவில் தெருவில் பொதுமக்கள் சார்பில் ராஜ விநாயகர் வைத்து சிறப்பு பூஜை...;
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விநாயகரை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். ராசிபுரம் புதுப்பாளையம் சாலை தியாகராஜ சுவாமி கோவில் தெருவில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரின் சார்பாக 5 அடி உயரம் கொண்ட ராஜ விநாயகரை வைத்து பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை , அவல், சர்க்கரைப் பொங்கல், பொரி உருண்டை போன்ற தேங்காய் பழத்துடன் வைத்து சிறப்பாக பூஜை செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கினர். சிறுவர்கள் குழந்தைகள் விநாயகர் பாடல்கள் பாடி ஆடி மகிழ்ந்தனர்.