ராசிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அலங்கார பூஜை..
ராசிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அலங்கார பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலை முதலே பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீ சக்தி விநாயகருக்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு வெள்ளி காப்பு மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் பெருமாள் சிறப்பாக செய்திருந்தார்.