கரடிப்பட்டியில் சாலை ஓரம் நின்றிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து-
கரடிப்பட்டியில் சாலை ஓரம் நின்றிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து-;
கரடிப்பட்டியில் சாலை ஓரம் நின்றிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கரடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 65. இவர் புதன்கிழமை அப்பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் நின்றிருந்த பழனிச்சாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அரவக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மகள் குமாரசெல்வி வயது 35 என்பவர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல் துறையினர் சரக்கு வாகன ஓட்டுனர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.