கோரைக்காட்டில் திடீர் தீ விபத்து- தீயை அணைத்த வீரர்கள்.
கோரைக்காட்டில் திடீர் தீ விபத்து- தீயை அணைத்த வீரர்கள்.;
கோரைக்காட்டில் திடீர் தீ விபத்து- தீயை அணைத்த வீரர்கள். கரூர் மாவட்டம், புகலூர் வட்டம்,நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேட்டு பிள்ளையார் கோவில் அருகே கோரைக்காடு இன்று மதியம் திடீரென தீ பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவம் அறிந்த தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காகித ஆலை தீயணைப்புத் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.