அரசு பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பொதுமக்கள்

பல்லடத்தில் அரசு பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பொதுமக்கள்;

Update: 2025-08-29 05:35 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிநாதன் பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கல்விச்சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் காலைலாதன் பாளையம் பகுதியில் உள்ள பொன் நகர் விநாயகர் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்திற்கு தேவையான பீரோ,டேபிள், சேர்கள், போன்ற உபகரணங்கள் விளையாட்டுப் பொருட்கள் அன்றாடம் உணவு, பாடப் படிப்புக்கு பயன்படுத்தும் பொருட்கள் என சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்களை கோயிலுக்கு சீர்வரிசையாக கொண்டு செல்வது போன்று அரசு பள்ளிக்கு கொண்டு சென்ற சம்பவம் பகுதியில் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது

Similar News